ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை

प्रविष्टि तिथि: 04 AUG 2026 3:02PM by PIB Chennai

ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் மற்றும் தேசிய ஹோமியோபதி ஆணையம் மூலம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்குத் திறன்சார்ந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன மருத்துவ முன்னேற்றங்களை ஆயுஷ் மருத்துவத்துடன் இணைத்தல், செய்முறைப் பயிற்சிகளுக்கு 1:2 என்ற விகிதத்தில் கூடுதல் நேரம் ஒதுக்குதல் மற்றும் மருத்துவத் திறன் ஆய்வகங்களை அமைத்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் தரத்தை உறுதி செய்ய 'தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு' அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆயுஷ் கிரிட் மற்றும் இணையதளங்கள் வாயிலாக டிஜிட்டல் கற்றல் முறைகளும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய ஆயுஷ் திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294220&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2294503) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी