குடியரசுத் தலைவர் செயலகம்
இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு, கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்குவதற்கான சூழலை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
प्रविष्टि तिथि:
03 AUG 2026 6:48PM by PIB Chennai
இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு, கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்குவதற்கான சூழலை பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டக்கில் உள்ள ஜகத்குரு கிருபாலு பல்கலைக்கழகத்தை இன்று (ஆகஸ்ட் 3, 2026) திறந்து வைத்து அவர் உரையாற்றினார்.
ஒடிசா அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், சேவை ஆகியவற்றின் வழமையான பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலம் என்று அவர் குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாக, மகாபிரபு ஜகன்னாதர் இருக்கும் இந்த புனித பூமி, அனைவரையும் உள்ளடக்கிய மனப்பான்மை, கருணை, மனிதநலன் போன்ற பண்புகளைப் பரப்பி வருகிறது.
உத்கல் கௌரவ் மதுசூதன் தாஸ், கர்மவீர்ர் கௌரி சங்கர் ராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பிஜு பட்நாயக் போன்ற மாபெரும் ஆளுமைப் பண்புகளைக் கொண்ட தலைவர்கள் பிறந்த இடமாக கட்டாக் நகரம் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும், உத்கல்மணி பண்டிட் கோபபந்து தாஸ், உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் ஆகியோர் பணியாற்றிய இடமாகவும் இது விளங்குகிறது என்றார்.
பொது சேவை, இலக்கியம், கலாச்சாரத் துறைகளில், இந்த நகரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலும்ம் உத்வேகம் அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இத்தகைய சிறப்பான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜகத்குரு கிருபாலு பல்கலைக்கழகம், இந்தியாவின் பண்டைய கலாச்சார, ஆன்மீக மரபுகளை நவீன கல்வியுடன் இணைப்பதன் மூலம், சமூகம், நாட்டிற்கான சேவையில் வலுவான ஊடகமாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293975®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2294088)
आगंतुक पटल : 6