ரெயில்வே அமைச்சகம்
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரயில்வே சரக்கு போக்குவரத்தில் 9 சதவீதம் வளர்ச்சி
प्रविष्टि तिथि:
03 AUG 2026 3:20PM by PIB Chennai
இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்தில் 2025 ஜூலையுடன் ஒப்பிடும்போது 2026 ஜூலையில் 9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025 ஜூலையில் 129.7 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்ட நிலையில் 2026 ஜூலையில் 141.3 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது.
இரும்புத் தாது 22.2 சதவீதமும் நிலக்கரி 11.5 சதவீதமும் உணவு தானியங்கள் 11.5 சதவீதமும் உரங்கள் 12 சதவீதமும் இதரப் பொருட்கள் 12.1 சதவீதமும் அதிகளவில் கையாளப்பட்டுள்ளன. அனல்மின் நிலையங்களில் நிலக்கரித் தேவை அதிகரிப்பதையடுத்து கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில் கடந்த ஜூலை மாதத்தில் மின் நிலையங்களுக்கான உள்நாட்டு விநியோகத்தை இந்திய ரயில்வே 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 62.19 கோடி பயணிகளை கையாண்ட நிலையில் 2026 ஜூலை மாதத்தில் 63.35 கோடி பயனாளிகளை இந்திய ரயில்வே கையாண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293758®=3&lang=1
***
TV/IR/SM/SE
(रिलीज़ आईडी: 2294078)
आगंतुक पटल : 5