சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உடல் உறுப்பு தானம் என்பது கருணையின் உயரிய வெளிப்பாடாகத் திகழ்வதுடன், வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பையும் வழங்குகிறது: மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2026 2:28PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய உடல் உறுப்பு, திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பு, புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நாடு தழுவிய நிகழ்ச்சியின் வாயிலாக, 16-வது தேசிய உடல் உறுப்பு தான தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
மறைவிற்குப் பின்னர் உடல் உறுப்பு தானம் செய்தவர்கள், அவர்களது குடும்பத்தினரின் விலைமதிப்பற்ற பங்களிப்பை கௌரவிக்கும் அதே வேளையில், இந்தியாவின் உடல் உறுப்பு தானம், திசு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், உடல் உறுப்பு செயலிழப்பின் இறுதிக்கட்ட நிலையில் போராடும் நபர்களுக்கு, வாழ்வதற்கான இரண்டாவது வாய்ப்பை வழங்குவதன் மூலம், உறுப்பு தானம் என்பது கருணையின் மிக உயரிய வெளிப்பாடாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
மறைவிற்குப் பிந்தைய உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு, அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார். அவர்களது தன்னலமற்ற முடிவுகள், நாட்டிற்கு உத்வேகம் அளிப்பதுடன், நாட்டின் உடல் உறுப்பு தானத்திற்கான இயக்கத்தையும் வலுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பல்வேறு மாநில அரசுகளின் பாராட்டத்தக்க முயற்சிகளை அங்கீகரித்ததுடன், நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம், திசு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருமதி அனுப்பிரியா படேல் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293718®=3&lang=1
***
TV/SV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2293979)
வருகையாளர் எண்ணிக்கை : 63