நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு, வர்த்தக சுரங்களின் மாதாந்திர உற்பத்தி, விநியோகம் 2026 ஜூலையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது

प्रविष्टि तिथि: 03 AUG 2026 12:21PM by PIB Chennai

உள்நாட்டு மற்றும் வர்த்தக நிலக்கரிச் சுரங்கத் துறை தமது வலுவான வளர்ச்சி சூழலை பராமரித்து 2026 ஜூலையில் தொடர்ந்து அதிக உற்பத்தியைக் கண்டுள்ளது. இது நாட்டின் நிலக்கரி சூழலில் அதன் வளர்ந்து வரும் பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது. இம்மாதத்தில் உள்நாட்டு, வர்த்தகச் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 14.78 மில்லியன் டன்னாக இருந்தது. அதேவேளையில் நிலக்கரி விநியோகம் 17.49 மில்லியன் டன்னாக இருந்தது. 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது நிலக்கரி உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 9.61 சதவீதமாகும். இது சுரங்க நடவடிக்கைகளில் நீடித்த வளர்ச்சியையும், நாட்டின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் இந்த சுரங்களின் அதிகரித்து வரும் பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்த ஊக்கமளிக்கக் கூடிய செயல்திறன், உள்நாட்டு மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கத் துறையில் தொடர்ச்சியான செயல்திறன் மேம்பாடு, மேம்பட்ட சுரங்க உற்பத்தி, சுரங்கங்களைத் திறம்பட பயன்படுத்துவது ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293622&reg=3&lang=1

***

VJ/PD/IR/SM/KR


(रिलीज़ आईडी: 2293846) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu