நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிக நிலக்கரிச் சுரங்கங்கள் தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு உந்துசக்தி

प्रविष्टि तिथि: 02 AUG 2026 2:33PM by PIB Chennai

இந்தியாவின் எரிசக்தித் தேவையின் பெரும்பகுதியை நிலக்கரி பூர்த்தி செய்கிறது. இது நாட்டின் முதன்மை எரிசக்தித் தேவைகளில் கிட்டத்தட்ட 55 சதவீதத்தையும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும் பூர்த்தி செய்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய நிலக்கரி வளத்தை இந்தியா கொண்டுள்ளதுடன், நிலக்கரியின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் திகழ்கிறது. 350-க்கும் மேற்பட்ட சுரங்கங்களில் இந்த நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது.

2014-15-ம் நிதியாண்டில் 609.18 மெட்ரிக் டன்னாக இருந்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, தற்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒரு பில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் 1047.52 மெட்ரிக் டன்னாகவும், 2025-26-ம் நிதியாண்டில் 1040.08 மெட்ரிக் டன்னாகவும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியின் கணிசமான பகுதி, நிறுவனங்களின் சொந்த தேவைகளுக்கான உற்பத்தி, வணிக ரீதியான நிலக்கரி உற்பத்தி ஆகியவற்றிலிருந்து வந்துள்ளது. தேசிய உற்பத்தியில் அவற்றின் பங்கு, 2021-22-ம் நிதியாண்டில் 10.9 சதவீதத்திலிருந்து 2025-26-ம் நிதியாண்டில் 20.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2020 ஜூன் 18 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் தற்சார்பு பாரத இயக்கத்தின் கீழ், வணிக ரீதியான நிலக்கரிச் சுரங்கம் முறைப்படி தொடங்கப்பட்டது. இது, போட்டி அடிப்படையில் நிலக்கரியை விற்பனை செய்யவும், பொதுத்துறைக்கு அப்பாற்பட்டு பங்கேற்பை விரிவுபடுத்தவும் வழிவகுத்தது. இனி, ஏலத்தில் வெற்றி பெறும் ஒருவர், எந்தவொரு துறையிலும் உள்ள எந்தவொரு நுகர்வோருக்கும், சந்தையால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை விற்கலாம். இதற்கு, சொந்தப் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடோ அல்லது நிலக்கரி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான தடையோ இல்லை.

முன்னர் இருந்த ஒரு டன்னுக்கான நிலையான கட்டண முறைக்கு பதிலாக, வருவாய் பகிர்வு மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதி விதிமுறைகள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டன.

ஜூன் 2020 முதல், 14 சுற்றுகளாக 141 நிலக்கரிச் சுரங்கங்கள் வணிக ரீதியாக ஏலம் விடப்பட்டுள்ளன. இவற்றின் ஒருங்கிணைந்த உச்சபட்ச ஆண்டு உற்பத்தித் திறன் 366.35 மில்லியன் டன்கள் ஆகும்.

சொந்த, வர்த்தகச் சுரங்கத் தொகுதிகள் இணைந்து 2025-26-ம் நிதியாண்டில் சுமார் 210.46 மில்லியன் டன்களை உற்பத்தி செய்து, முதல் முறையாக 200 மில்லியன் டன் என்ற அளவைத் தாண்டியுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு 28.83 மில்லியன் டன்களாக இருந்தது.

அரசு கருவூலத்திற்கான வருவாயும் வளர்ந்துள்ளது. ஏலம் விடப்பட்ட ஒவ்வொரு சுரங்கமும் உற்பத்திக்குக் கொண்டுவரப்படுவதை உறுதி செய்வதே தற்போதைய கவனமாக உள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், சுரங்கத் தொகுதிகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் தேவைப்படும் அனுமதி நடைமுறைகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளன.

ஜூன் 2020 முதல் ஒவ்வொரு வணிக நிலக்கரித் தொகுதியும் திறந்த ஏலத்தின் மூலமே வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மை, போட்டி, அரசு - தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சமமான வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கிக் கொண்டு செல்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293366&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293509) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu