புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகத் தலைவர்களின் கூட்டம் லக்னோவில் நாளை தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
02 AUG 2026 3:58PM by PIB Chennai
பிரிக்ஸ் நாடுகளான இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகங்களின் தலைவர்கள் கூட்டம், இந்தியாவின் தலைமையில், நாளை (2026 ஆகஸ்ட் 03) உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
2026-ம் ஆண்டில் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பானது, "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற பரந்த கருப்பொருளால் வழிநடத்தப்படுகிறது. பிரிக்ஸ் புள்ளிவிவரப் பிரிவில், இந்தியா "மாற்றத்திற்கான உந்துசக்தியாகத் தரமான புள்ளிவிவரங்கள்" என்ற கருப்பொருளை ஏற்றுக்கொண்டுள்ளது. இது, தரவுகளின் தரம், புத்தாக்கம், மக்களை மையமாகக் கொண்ட புள்ளிவிவர அமைப்புகள் ஆகியவற்றில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த அமைப்புகள், விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நுணுக்கமான தரவுகள், சான்றுகள் அடிப்படையில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சார்ந்திருத்தல் ஆகியவற்றுக்கு ஏற்ப செயல்படுபவையாக உள்ளன. நவீன பிரிக்ஸ் கொள்கை வகுப்பானது, வளர்ச்சியைக் கண்காணிக்கவும், முடிவுகளுக்கு வழிகாட்டவும், பரஸ்பர புரிதலை உருவாக்கவும் வலுவான புள்ளிவிவரங்களைச் சார்ந்துள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகத் தலைவர்களின் கூட்டத்தில், பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிக்ஸ் கூட்டு புள்ளியியல் திட்டம் மூலம் புள்ளிவிவரங்களைப் பரப்புதல், புள்ளியியல் அமைப்புகளில் புதுமைகளைப் புகுத்துதல், அறிவியல் சார்ந்த சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293421®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2293497)
आगंतुक पटल : 8