பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் எஃப்57 ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற சுபம் ஜுயலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2026 12:50AM by PIB Chennai

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் எஃப்57 குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுபம் ஜுயலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுபம் ஜுயலின் வலிமையான நுட்பத்தையும், விளையாட்டு மீதான அவரது அர்ப்பணிப்பையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.

இந்தச் சாதனை அவரை இன்னும் பெரிய சாதனைகளை நோக்கிக் கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு நரேந்திர மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் எஃப்57 குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வந்த சுபம் ஜுயலை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். அவரது வலிமையான நுட்பமும், விளையாட்டு மீதான அர்ப்பணிப்பும் போற்றத்தக்கவை. இந்தச் சாதனை, அவரது அடுத்தடுத்த முயற்சிகளில் இன்னும் பெரிய சாதனைகளை நோக்கி அவரைக் கொண்டு செல்லட்டும்.”

****

(Release ID: 2293178)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2293453) வருகையாளர் எண்ணிக்கை : 6