நிலக்கரி அமைச்சகம்
விரிவான நலத்திட்ட மற்றும் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மூலம் ஓய்வுக்குப் பிந்தைய பராமரிப்பை கோல் இந்தியா வலுப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
01 AUG 2026 6:44PM by PIB Chennai
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிர்வாகம், சுகாதார வசதிகள், குறைகளைத் தீர்த்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம், கோல் இந்தியா லிமிடெட் (CIL) நிறுவனம், ஓய்வுக்குப் பிந்தைய தனது நலத்திட்டச் செயல்பாடுகளைப் பெருமளவு வலுப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள், 4.5 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.
கோல் இந்தியா நிறுவனம், கோல் மைன்ஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்துடன் (CMPFO) இணைந்து, சி-கேர்ஸ் தளத்தின் வாயிலாக ஓய்வூதிய நிர்வாகத்தின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளது. இதன் விளைவாக, ஓய்வுக்காலக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான சராசரி கால அளவு 30 நாட்களிலிருந்து வெறும் 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு முக்கிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கையாக, நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம், 2024 மார்ச் 8 முதல் மாதம் ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 40,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஓய்வுபெற்ற சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குக் கூடுதல் நிதி ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293054®=3&lang=1
****
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2293390)
आगंतुक पटल : 17