ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் பருத்தி உற்பத்தியையும் தரத்தையும் அதிகரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 7:13PM by PIB Chennai

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமான இந்தியப் பருத்திக் கழகம், தனது 56-வது நிறுவன தினத்தை இன்று மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தலைமையில் கொண்டாடியது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், பருத்தியை இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரம், தன்னிறைவு, விவசாய செழிப்பின் அடித்தளம் என்று கூறினார். பருத்தி விவசாயிகளின் நலனுக்கான அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவர் எடுத்துரைத்தார். 2025-26 பருத்திப் பருவத்தில் பருத்தி சந்தையின் சாதனைகளை அமைச்சர் குறிப்பிட்டார். இதன் மூலம், சுமார் 24 லட்சம் விவசாயிகளின், 522 லட்சத்திற்கும் அதிகமான குவிண்டால் விதைப்பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ₹41,530 கோடியையும் அரசு செலுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

2026-27 ஆம் ஆண்டு பருத்திப் பருவத்திற்காக, விதைப்பருத்திக்கான (கபாஸ்) குறைந்தபட்ச ஆதரவு விலை சுமார் 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது லாபகரமான விலையை உறுதிசெய்து, நாடு முழுவதும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார். சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட பருத்தி உற்பத்தித்திறன் இயக்கம் குறித்துக் குறிப்பிடுகையில், ஐந்து ஆண்டுகளில் ₹5,659 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த இயக்கம், பருத்தியின் உற்பத்தித்திறன், தரத்தை மேம்படுத்துதல், பருத்தி பதப்படுத்தும் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியாகும் என்று கூறினார்.

 விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்கும், தரமான பருத்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், இந்தியப் பருத்திக் கழகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் திரு கிரிராஜ் சிங் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2293070&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293153) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati