ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளி அமைச்சகம் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடுகிறது - குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார்

प्रविष्टि तिथि: 01 AUG 2026 2:07PM by PIB Chennai

இந்தியாவின் வளமான கைத்தறி பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்கும், நாட்டின் கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், ஜவுளி அமைச்சகம் 2026 ஆகஸ்ட் 7 அன்று புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 12-வது தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடவுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்தக் கொண்டாட்டங்களில், தேசிய கைத்தறி விருது பெற்றவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நாடு முழுவதிலுமிருந்து கைத்தறி நெசவாளர்கள், கைத்தறித் துறையுடன் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், மூத்த அரசு அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள், பிற சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய அம்சமாக, 2025-ம் ஆண்டிற்கான சந்த் கபீர் கைத்தறி விருதுகள், தேசிய கைத்தறி விருதுகள் ஆகியவை வழங்கப்படும். இந்தியாவின் கைத்தறி மரபுகளைப் பாதுகாப்பதில் தலைசிறந்த கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பிற்காக, 3 சந்த் கபீர் கைத்தறி விருதுகள், 19 தேசிய கைத்தறி விருதுகள் என மொத்தம் 22 விருதுகள் வழங்கப்படும்.

இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த கைத்தறி நெசவுப் பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில், நான்கு நினைவு அஞ்சல் தலைகளும் இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விருது பெற்ற கைத்தறிப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். 2026 ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் பிரதான விழா மட்டுமின்றி, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கண்காட்சிகள், மாநாடுகள் போன்ற பிற முக்கிய நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் கைத்தறித் துறை, நாட்டின் கிராமப்புற வேலைவாய்ப்பின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குகிறது. இது 35 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது.

1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில், 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292927&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2293048) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Khasi , Urdu , हिन्दी , Telugu