பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் போட்டி ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 AUG 2026 8:48AM by PIB Chennai
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா மீண்டும் ஒருமுறை அபாரமான நிலைத்தன்மை, நிதானம், மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்கின்றன என்று கூறியுள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயலாற்றி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்!
அவர் மீண்டும் ஒருமுறை அபாரமான நிலைத்தன்மை, நிதானம், மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வெற்றிகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்கின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்."
****
(Release ID: 2292834)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2292925)
வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
Kannada
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu