பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ் வீர் சிங்குக்குப் பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 AUG 2026 8:49AM by PIB Chennai
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ் வீர் சிங்குக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
யஷ் வீர் சிங் தமது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக ஈட்டி எறிந்திருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
அவரது சாதனை பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யஷ் வீர் சிங்குக்கு வாழ்த்துகள்! அவர் தமது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக ஈட்டி எறிந்துள்ளார். அவரது இந்தச் சாதனை பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்."
***
(Release ID: 2292835)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2292921)
आगंतुक पटल : 6