வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜெம் (அரசு மின் சந்தை) 10-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 10 நாள் கொண்டாட்டங்களைத் தொடங்கியது

प्रविष्टि तिथि: 31 JUL 2026 6:38PM by PIB Chennai

தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றின் மூலம் பொதுக் கொள்முதலில் ஒரு தசாப்த கால மாற்றத்தைக் கொண்டாடும் அரசு மின் சந்தைத்தளம் (ஜெம்), தனது 10-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 10 நாள் கொண்டாட்டங்களை இன்று முறைப்படி தொடங்கியது.

இந்தியாவின் நம்பகமான டிஜிட்டல் பொதுக் கொள்முதல் கட்டமைப்பை உருவாக்குவதில் ஜெம் - இன் பத்து ஆண்டுகாலப் பயணத்தைப் பறைசாற்றும் வகையில், அதன் 10-வது நிறுவன நாள் குறித்த அதிகாரப்பூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ஜெம் தலைமை நிர்வாக அதிகாரி திரு மிகிர் குமார், கடந்த பத்தாண்டுகளில் இந்தத் தளம் மேற்கொண்ட மாற்றகரமான பயணத்தை எடுத்துரைத்ததுடன், வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் பங்குதாரர்களை மையமாகக் கொண்ட பொதுக் கொள்முதல் ஆகியவற்றின் அடுத்த கட்டத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையையும் விவரித்தார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 5 அன்று நுகர்வோர் சந்திப்பும், ஆகஸ்ட் 10 அன்று விற்பனையாளர் வட்டமேசை மாநாடும் நடைபெறவுள்ளன.  மேலும், ஜெம் சூழலியலை வலுப்படுத்துவதில் முன்மாதிரியான பங்களிப்புகளை வழங்கிய நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292657&reg=3&lang=1     

---

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2292819) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी