ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல்: ஆயுஷ் அமைச்சகம்- 'இந்தியா ஏஐ' இடையே ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 31 JUL 2026 10:31AM by PIB Chennai

ஆயுஷ் துறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும்ஆராய்ச்சிடிஜிட்டல் சுகாதாரம்திறன் மேம்பாட்டை மேம்படுத்தவும் ஆயுஷ் அமைச்சகமும்மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்தியா ஏஐஅமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் கவிதா ஜெயின், 'இந்தியா ஏஐஇயக்கத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி திரு சுதீப் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் பேசிய டாக்டர் கவிதா ஜெயின், ஆயுஷ் துறையுடன் செயற்கை நுண்ணறிவை இணைப்பது ஆதாரப்பூர்வமான ஆராய்ச்சி, அறிவு மேலாண்மை, புதிய கண்டுபிடிப்புகளுக்குப் புதிய வழிகளைத் திறக்கும் என்று கூறினார். ஆராய்ச்சி, மூலிகைத் தாவரங்கள், மருந்துகள் நிர்வாகம், திறன் மேம்பாடு போன்ற துறைகளில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், ஆயுஷ் துறையைத் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையிலும் மாற்றவும் இந்தக் கூட்டாண்மை உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சுதீப் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், இந்தியாவின் பாரம்பரிய அறிவு அமைப்புகளுடன் நவீனத் தொழில்நுட்பத்தை இணைப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292169&reg=3&lang=1

***

SS/PD/SE


(रिलीज़ आईडी: 2292656) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu