மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மறுசீரமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நிதியுதவி ஆகியவற்றிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 4:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2026) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்திற்குரூ.36,441 கோடி ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீட்டில்விரிவாக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டத்திற்கும்தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட உதவித் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுஇளைஞர் மேம்பாட்டுக்காகவும்விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காகவும் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் மிகவும் லட்சியமிக்க விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம் இதுவாகும். நாட்டின் இளைஞர்களின் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு இது ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளதுடன்வரும் பத்தாண்டுகளில் ஒரு பெரும் மாற்றத்தையும்தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிதி ஒதுக்கீடுமுந்தைய கேலோ இந்தியா திட்டத்தை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாகும். இதுஇளைஞர் நலன்தேசத்தைக் கட்டமைத்தல்இந்தியாவை உலகளாவிய விளையாட்டு வல்லரசாக மாற்றுதல் ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

இந்த மறுசீரமைக்கப்பட்ட திட்டம்ஒவ்வொரு திறமையான இளம் இந்தியருக்கும் விளையாட்டுகளில் ஒரு தடையற்ற பாதையை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புவியியல்பொருளாதாரப் பின்னணி அல்லது வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் எந்தவொரு வீரரின் விளையாட்டுத் திறமையும் கண்டறியப்படாமல் போய்விடக்கூடாது என்பதை உறுதி செய்ய இத்திட்டம் முயல்கிறது.

இந்தத் திட்டம்தேசிய சிறப்பு மையங்கள்கேலோ இந்தியா சிறப்பு மையங்கள்விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி மையங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாடு தழுவிய விளையாட்டுச் சூழல் அமைப்பை நிறுவுகிறது. இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்துநாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிவிளையாட்டு அறிவியல் ஆதரவுநவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292439&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SE


(रिलीज़ आईडी: 2292642) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam