மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மொத்த மருந்துப் பூங்கா

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 2:30PM by PIB Chennai

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள ஹரோலியில் அமைக்கப்பட உள்ள மொத்த மருந்துப் பூங்காவில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை  உருவாக்குவதற்காக, "மொத்த மருந்துப் பூங்காக்களை ஊக்குவிக்கும்" திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ 1000 கோடி மானிய உதவிக்கு  ஒப்புதல் அளித்துள்ளது. நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர்  கொள்ளளவு கொண்டபூஜ்ஜிய கழிவுநீர் வெளியேற்ற வசதியுடன் கூடிய பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ரூ 244.43 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு  கூடுதல் நிதி உதவி கோரி ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது. இருப்பினும்திட்ட வழிகாட்டுதல்களின்படிதிட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட மானிய உதவிக்கு மட்டுமே நிதி உதவி வரையறுக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மொத்த மருந்துப் பூங்காவிற்கு அருகில் 'நைபர்'  விரிவாக்க மையம் அமைப்பதற்கான முன்மொழிவு எதுவும் இல்லை.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292339&reg=3&lang=1

***

TV/PKV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2292636) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी