அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத் திட்டத்தின் கீழ், தேர்வு செயல்முறைகள் தொடர்பான விளக்கம்
प्रविष्टि तिथि:
31 JUL 2026 11:13AM by PIB Chennai
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத் திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில் முரண்பாடுகள் இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அந்த செய்திகள் தவறானவை, பிழையானவை என்று தெளிவுபடுத்தப்படுகிறது.
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் பின்பற்றப்படும் வலுவான மதிப்பீட்டு வழிமுறைகள், வழிகாட்டுதல்கள், தகுதி அடிப்படையிலான தேர்வு செயல்முறைகள் ஆகியவை தொடர்பாக அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விளக்கத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறது.
வலுவான கொள்கை: தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தில் ஒரு விரிவான, வலுவான கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்தக் கொள்கை குறித்து எந்தவொரு புகாரோ, குறையோ அல்லது முறைகேடோ பதிவாகாமல் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
முதலீட்டிற்கு முந்தைய வழிகாட்டுதல்கள்: தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் விரிவான முதலீட்டிற்கு முந்தைய வழிகாட்டுதல்கள் / நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், நிபந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 திட்டங்களில், 15 திட்டங்கள் கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட தனித்தனி நிபுணர் குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள், தொழில்நுட்பத் தகுதி, புத்தாக்க ஆற்றல், தேசிய முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292203®=3&lang=1
***
SS/PLM/RJ/SH
(रिलीज़ आईडी: 2292366)
आगंतुक पटल : 9