அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 4:35PM by PIB Chennai
அறிவியல் - தொழில்நுட்பத் துறை (DST) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆராய்ச்சி - மேம்பாட்டுப் புள்ளி விவரங்களின்படி, ஆராய்ச்சி - மேம்பாட்டிற்காகச் செய்யப்பட்ட செலவினங்களின் விவரங்கள்:
2023-24:
அரசுத் துறை - ₹1,17,861.21 கோடி
தனியார் துறை - ₹1,26,906.60் கோடி
ஆராய்ச்சி - மேம்பாட்டிற்கான மொத்த செலவினம் ₹244,767.81 கோடி
1. அரசுத் துறையில் மத்திய அரசு அமைச்சகங்கள்/துறை நிறுவனங்களின் ஆராய்ச்சி - மேம்பாட்டுச் செலவினங்கள் + மாநில அரசு அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள்/மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் + பொதுத்துறை/கூட்டுத்துறை தொழிற்சாலைகள் + பொது உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.
2. தனியார் துறையில், தனியார் துறை தொழிற்சாலைகள், அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி மேம்பாட்டுச் செலவினங்கள் அடங்கும்.
அறிவியல் ஆராய்ச்சியில் முதலீட்டை அதிகரிப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அவற்றுள் சில:
* அறிவியல் துறைகள், ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிப்பு.
* அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து கூடுதல் நிதியைத் திரட்டுதல்.
* தேசிய குவாண்டம் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
அறிவியல் - தொழில்நுட்பத் துறைகளின் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (30.07.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291780®=3&lang=1
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2292112)
आगंतुक पटल : 10