அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ், குவாண்டம் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மேம்பாடு மனிதவளத்திற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 4:33PM by PIB Chennai

குவாண்டம், கனிணி தொழில்நுட்பம், குவாண்டம் தகவல் தொடர்பு, குவாண்ம் உணர்திறன், அளவியல், குவாண்டம் பொருட்கள், சாதனங்கள் ஆகிய துறைகளில் தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ், நான்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக தேவையான மனிதவளம் குறித்த மதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் தேவைகள் அடிப்படையில் இந்த நான்கு மையங்களும் அறிவியல் தொழில்நுட்ப மனிதவளத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ், குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாடு பணிகளுடன் மனிதவள மேம்பாட்டிற்கான பல்வேறு அம்சங்களைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 17 திட்டக் குழுக்கள், 14 தொழில்நுட்ப குழுக்கள், 23 இளங்கலை கற்பித்தல் ஆய்வகங்கள், குவாண்டம் அல்காரிதம்ஸ் தொழில்நுட்ப குழுவின் கீழ், 17 குழுக்களும் அடங்கும். குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஜப்பான் நாட்டுடன் இணைந்து செயல்படும் வகையில், விருப்ப கடிதம் ஒன்றில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை சர்வதேச அளவிலான ஒத்துழைப்பிற்கு வழி வகுத்துள்ளது.

தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ், பட்டியலிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 உயர்க்கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், சென்னை ஐஐடி, எஸ்இடிஎஸ் சென்னை, ராஜலக்ஷிமி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருவள்ளூர் சென்னை, எஸ்ஆர்ஆம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சென்னை ஆகியவை அடங்கும்.

மாநிலங்களவையில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291775&reg=3&lang=1  

*

TV/SV/RJ/SE


(रिलीज़ आईडी: 2292084) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu