பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 69 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கௌருக்கு மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வாழ்த்து
प्रविष्टि तिथि:
29 JUL 2026 11:00AM by PIB Chennai
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 69 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஹர்ஜிந்தர் கௌருக்கு, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தமது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த அற்புதமான சாதனை இந்தியாவின் மகள்களின் தைரியம், அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றுக்கு ஓர் அடையாளச் சின்னம் என்று கூறியுள்ளார். இந்த வெற்றி, நாட்டின் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க ஊக்கமளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஜிந்தர் கௌரின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், அடுத்தடுத்த போட்டிகளில் அவரது சிறப்பான செயல்பாடுகளுக்கும் அமைச்சர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2292072)
आगंतुक पटल : 13