கலாசாரத்துறை அமைச்சகம்
பிரிக்ஸ் கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டங்களின் முடிவுகள்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 3:45PM by PIB Chennai
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் முறையே 2026 ஏப்ரல் 29-30, ஜூன் 5-6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல், இரண்டாவது பிரிக்ஸ் கலாச்சாரப் பணிக்குழு கூட்டங்களில், படைப்பாற்றல் பொருளாதாரம், மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, படைப்பாற்றல் பொருளாதாரத்தில் பதிப்புரிமை, நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு, கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பிற்கான உத்திகள், கடத்தப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைத்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே, மாறிவரும் டிஜிட்டல் சூழலில் படைப்பாளர்கள், கலைஞர்கள், கலாச்சாரப் பயிற்சியாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பது குறித்தும் விவாதக்கப்பட்டது. அறிவுசார் சொத்துரிமைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்றவை குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
வாரணாசியில் நடைபெற்ற 2-வது பிரிக்ஸ் கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் கலந்துரையாடல்களும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று (30.07.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291715®=3&lang=1
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2292064)
आगंतुक पटल : 5