தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் சி-டாட் சீர்மிகு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:46PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் சி-டாட் சீர்மிகு மையம் அமைப்பதற்காக அறிவியல், புத்தாக்கம், மேம்பாட்டு அறக்கட்டளை ஆகியவற்றுடன் டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தை அமைப்பதற்காக சி-டாட் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

உள்நாட்டு தொலைத்தொடர்பு ஆராய்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த சீர்மிகு மையம் அமைக்கப்படவுள்ளது. மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆராய்ச்சி, மேம்பாட்டிற்கான பிரத்யேக மையமாக இந்த சீர்மிகு மையம் செயல்படும். இது தொலைத்தொடர்புத்துறையில் இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கும் உதவிடும். கல்வி – தொழில்துறை இடையேயான கூட்டு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த சி-டாட் நிறுவனம் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டிற்கான மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் உள்நாட்டு ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாடு, வர்த்தக மயமாக்கல் போன்றவற்றை விரைவுபடுத்தும் நோக்கில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவன வளாகத்தில் இந்த சீர்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291619&reg=3&lang=1  

***

TV/SV/RJ/SH

 


(रिलीज़ आईडी: 2291674) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada