சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தமிழ்நாட்டில் பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்டோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான நலன் மற்றும் அதிகாரமளித்தல் திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன
प्रविष्टि तिथि:
29 JUL 2026 6:34PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு முக்கியத் திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான அதிகாரமளித்தலை மத்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பட்டியலின பிரிவினருக்கான பள்ளிப் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளின் எண்ணிக்கை 2023-24-ல் 6,43,761-லிருந்து 2024-25-ல் 9,34,793 ஆகவும், 2025-26-ல் 9,66,840 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல, பட்டியலின மற்றும் இதர பிரிவினருக்கான பள்ளிக்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் 2023-24-ல் 3,35,642 மாணவர்களும், 2024-25-ல் 5,21,124 மாணவர்களும், 2025-26-ல் 5,82,684 மாணவர்களும் பயனடைந்தனர்.
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்கள் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மெட்ரிக் படிப்புக்கு முந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 2023-24-ல் 2.94 லட்சம் மாணவர்களும், 2024-25-ல் 8.75 லட்சம் மாணவர்களும், 2025-26-ல் 2.76 லட்சம் மாணவர்களும் பயனடைந்துள்ளனர். மெட்ரிக் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம் முறையே 4.76 லட்சம், 4.59 லட்சம் மற்றும் 3.67 லட்சம் மாணவர்களை உள்ளடக்கியிருந்தது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291281®=3&lang=1
***
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2291602)
आगंतुक पटल : 10