கூட்டுறவு அமைச்சகம்
இந்தியாவில் கூட்டுறவுச் சங்கங்களின் நிலை
प्रविष्टि तिथि:
29 JUL 2026 4:37PM by PIB Chennai
தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின்படி (15.07.2026), நாடு முழுவதும் 8,53,430 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு சங்கங்களின் மொத்த எண்ணிக்கை குறித்த துறை வாரியான மற்றும் மாநில வாரியான விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தேசிய கூட்டுறவுத் தரவுத்தளத்தின்படி, 15.07.2026 நிலவரப்படி, 8.53 லட்சம் கூட்டுறவுச் சங்கங்களில், 6.63 லட்சம் செயல்பாட்டில் உள்ளன, 1.41 லட்சம் செயல்படாதவை மற்றும் 49,177 கலைக்கப்பட்டு வருகின்றன. செயல்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை, செயல்படாத கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை மற்றும் பணப்புழக்கம் குறைவாக உள்ள கூட்டுறவு சங்கங்களின் மொத்த எண்ணிக்கை குறித்த மாநில வாரியான விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
15.07.2026 நிலவரப்படி, 6.63 லட்சம் செயல்பாட்டு கூட்டுறவு சங்கங்களில், 3.56 லட்சம் லாபம் ஈட்டுகின்றன. 2.50 லட்சம் நஷ்டத்தில் உள்ளன. 56, 689 சங்கங்களுக்கான நிதி தகவல்கள் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 23,034 தொடக்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 21,090 இயங்கி வருகின்றன. 1,185 சங்கங்கள் இயங்காமல் உள்ளன. 759 சங்கங்கள் கலைக்கப்பட்டு வருகின்றன.
21,090 சங்கங்களில், 12,540 சங்கங்கள் லாபத்தில் இயங்குகின்றன. 8,540 நட்டத்தில் இயங்குகின்றன. 10 சங்கங்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291121®=3&lang=1
***
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2291575)
आगंतुक पटल : 8