பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026 மக்களவையில் நிறைவேறியது
प्रविष्टि तिथि:
29 JUL 2026 6:02PM by PIB Chennai
பொதுத்தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா 2026 மக்களவையில் விரிவான விவாதத்திற்குப் பிறகு இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த விவாதத்தின் மீது பதில் அளித்துப் பேசிய மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தத் திருத்தங்கள் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான சட்டக்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி மாணவர்கள், இளைஞர்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.
பொதுத் தேர்வு முறைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் கூறினார். தேர்வு தொடர்பான திட்டமிட்ட குற்றச்செயல்களை திறன்மிக்க வகையில் எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஏற்றுக் கொள்வதையும் அனுபவம் மூலம் கற்றுக் கொள்வதையும் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதையும் அரசின் வெளிப்படையான அணுகுமுறையை இத்திருத்தங்கள் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.
யுபிஎஸ்சி, அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள், வங்கிப் பணியாளர் தேர்வாணையம், உயர்கல்வி சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை உட்பட முக்கியப் பணியாளர் சேர்ப்பு முகமைகளால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க விரிவான சட்டக்கட்டமைப்பை உருவாக்க பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம் 2024 இயற்றப்பட்டத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தச் சட்டத்திற்குள் வரும் குற்றங்கள் ஏற்கனவே கடும் தண்டனை விதிகளுடன் காவல் துறையினர் தாமாகவே நடவடிக்கை எடுக்கக் கூடிய, பிணையில் வெளியே வர இயலாத, சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் சிறைதண்டனையிலிருந்து 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்ச அபராதம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291258®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2291475)
आगंतुक पटल : 6