பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'கார்ப்பரேட் மித்ரா' திட்டம் குறித்த விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கை ஐஐசிஏ நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 29 JUL 2026 3:49PM by PIB Chennai

பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பெருநிறுவன  விவகாரங்கள் நிறுவனம் (ஐஐசிஏ), ஷில்லாங் கிளை, மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 'கார்ப்பரேட் மித்ரா' திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2026 ஜூலை 27 அன்று ஒரு இணையவழி கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது.

வடகிழக்கு பிராந்தியத்திற்கான  இத்திட்டத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலத்திற்கான இந்த இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகம், மாநில அளவில் இத்திட்டத்திற்கான பரந்த அளவிலான தகவல் பரவல் மற்றும் பங்கேற்பாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டது. 'இந்திய காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் நிறுவனம்'  'இந்திய கம்பெனி செயலாளர்கள் நிறுவனம்'  'இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்'  இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தன.

மிசோரம் முழுவதும் உள்ள முன்னணி மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழில்முனைவோர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் இந்த இணையவழி கருத்தரங்கில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291056&reg=3&lang=1

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2291454) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese