உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் நக்சல் தீவிரவாத நிலை குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 29 JUL 2026 3:41PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையின்படி, காவல் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவையாகும். எனினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்கி வருகிறது. இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தலை வலுவாக எதிர்கொள்ள ஏதுவாக கடந்த 2015-ம் ஆண்டில் தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டு முயற்சிகள், உள்ளூர் மக்களின் உரிமைகள், சலுகைகள் வழங்குவது போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும். உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்பட்ட இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

2018 ஏப்ரலில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 126 ஆக இருந்தது. மத்திய அரசு மேற்கொண்ட வலுவான நடவடிக்கைகள் காரணமாக 2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்தது.

மீண்டும் இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஏற்படாதவாறு தடுப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகள் மேலும் சிறிது காலத்திற்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய ஆயுத காவல்படைகளை அனுப்புதல், இந்திய ரிசர்வ் படை பிரிவை அமைத்தல், பாதுகாப்பு முகாம்களில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291043&reg=3&lang=1

****

TV/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2291448) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Telugu