சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் அஜய் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3,111 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
28 JUL 2026 7:26PM by PIB Chennai
பிரதமரின் பட்டியலின மேம்பாட்டுத் திட்டத்தின் (பிரதமரின் அஜய்) ஆதர்ஷ் கிராமம் திட்டக்கூறின் கீழ் 2018-19 முதல் 3,112 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள 3,111 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட குடிமை வசதிகள் மற்றும் சிறந்த பொதுச் சேவை வழங்கலுடன் கூடிய முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பட்டியலின சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் 2021-22-ல் தொடங்கப்பட்ட பிரதமரின் அஜய் திட்டம், ஆதர்ஷ் கிராமம், மானிய உதவி மற்றும் விடுதிகள் ஆகிய திட்டக்கூறுகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், கல்விக்கான அணுகல், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக, நிதி ஆயோக்கின் மேம்பாட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் நடத்திய மதிப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2025-26 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ. 4,276.62 கோடியை விடுவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290717®=3&lang=1
***
TV/BR/KR
(रिलीज़ आईडी: 2291172)
आगंतुक पटल : 9