பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை 2026 ஜூன் மாதத்தில் மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கான தமது 50-வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 29 JUL 2026 12:00PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை 2026 ஜூன் மாதத்தில் மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கான தமது 50-வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

மத்திய அமைச்சகங்கள், துறைகள் மூலம் 2026 ஜூன் மாதத்தில் 1,99,968 பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 78,793 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தில் 2026 ஜூன் மாதத்தில் பதிவு செய்த புதிய பயனாளர்கள் குறித்த தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வழிமுறைகள் மூலம் இந்த இணையதளத்தில் மொத்தம் 83,544 புதிய பயனர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 15,287 பேர் உத்தரப்பிரதேசத்திலிருந்து பதிவு செய்துள்ளனர். இக்காலகட்டத்தில் கருத்துக்களைப் பெறும் பொது மையத்திற்கு 75,318 கருத்துகள் கிடைத்துள்ளன. அவற்றில் 42,226 கருத்துகள் மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்காக தரப்பட்டுள்ளது. 32,269 மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு  32,256 மேல்முறையீட்டு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் பொதுச் சேவை மையங்கள் மூலம்  மொத்தம் 6,262 பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2026 ஜூன் மாதத்தில் அஞ்சல், தொலைதொடர்பு, நிதிச்சேவைகள் ஆகிய துறைகள் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு கண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290925&reg=3&lang=1     

----

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2291057) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati