பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2026 ஜூன் மாதத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான தமது 47-வது மாதாந்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
29 JUL 2026 11:55AM by PIB Chennai
நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான மத்திய பொதுமக்கள் குறைத்தீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பு 2026 ஜூன் மாதத்தில் தமது 47-வது மாதாந்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2026 ஜூன் மாதத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96,190 குறைதீர்ப்பு மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அவற்றில் 93,170 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 31,460 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 7,619 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. மொத்தம் 2,16,032 குறைதீர்ப்பு மனுக்கள் நிலுவையில் உள்ளன. 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைதீர்ப்பு மனுக்கள் நிலுவையில் உள்ளன.
மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளத்தில் 2026 ஜூன் மாதத்தில் பதிவு செய்த புதிய பயனர்கள் குறித்தத் தரவுகளின்படி, பல்வேறு வழிமுறைகள் மூலம் 83,544 புதிய பயனர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 15,287 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இக்காலகட்டத்தில் கருத்துக்களைப் பெறும் அழைப்பு மையத்திற்கு 75,318 கருத்துகள் வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290923®=3&lang=1
***
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2291055)
आगंतुक पटल : 5