பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச புலிகள் தினம்: பிரதமர் வாழ்த்து

புலிகள் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் செயல்பட உறுதி

प्रविष्टि तिथि: 29 JUL 2026 9:58AM by PIB Chennai

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வனவிலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பது குறித்து நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

அறிவியல்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக பங்கேற்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புலிகள் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் வனத்துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், வனஉயிரின பாதுகாவலர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.

புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களை பங்கேற்கச் செய்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் மனித-வனவிலங்குகள் மோதல் சம்பவங்களைக் குறைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “சர்வதேச புலிகள் தினத்தில் வனவிலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பது குறித்து நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர். இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இயற்கையோடு இயைந்து வாழும் நமது கலாச்சாரத்தின் மூலமும், மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவியல்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக பங்கேற்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்வோம்”.

புலிகள் பாதுகாப்பில் வனத்துறை அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், வன உயிரின பாதுகாவலர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புலிகள் பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களை பங்கேற்கச் செய்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மனித-வனவிலங்குகள் மோதல் சம்பவங்களைக் குறைக்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

 

(Release ID: 2290887)

***

TV/PD/KR

 


(रिलीज़ आईडी: 2291004) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam