சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பருவமழை தொடர்பான நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
28 JUL 2026 6:13PM by PIB Chennai
நாட்டில் பருவமழை தொடர்பான நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
டெங்குவைக் கண்காணிப்பதற்கும் இலவசமாக நோயைக் கண்டறியவும், நாடு முழுவதும் 887 கண்காணிப்பு மருத்துவமனைகள் மற்றும் 27 உயர் பரிந்துரை ஆய்வகங்கள் அடங்கிய ஒரு வலையமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய அரசு, புனேவில் உள்ள தேசிய நோய்க்கிருமி ஆய்வு நிறுவனம் (NIV) மூலம், அடையாளம் காணப்பட்ட அனைத்து ஆய்வகங்களுக்கும் பரிசோதனைக் கருவிகளை வழங்குகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நோயைக் குறைக்கவும், அதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கவும், “வயிற்றுப்போக்கை நிறுத்தும் பிரச்சாரம்” நடத்தப்படுகிறது. இந்தப் பிரச்சாரம், பாதுகாத்தல், தடுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் என்ற உத்தியைப் பின்பற்றுவதுடன், வாய்வழி நீரேற்றக் கரைசல் மற்றும் துத்தநாகச் சத்து வழங்குதல் ஆகியவற்றின் மூலம் வயிற்றுப்போக்கை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
சுகாதாரத்தை மேம்படுத்தவும், கொசுக்களின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மலேரியா மற்றும் பிற பூச்சிகள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றுகிறது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290626®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2290832)
आगंतुक पटल : 8