இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் 595 பேர் உட்பட நாடு முழுவதும் 5,465 பேர் மை பாரத் இளையோர் தன்னார்வலர்களாக உள்ளனர்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:10PM by PIB Chennai

தேசிய இளையோர் படைத்திட்டத்தின் கீழ், மை பாரத் இளையோர் தன்னார்வலர்களாக 5,465 பேரை இணைத்ததன் மூலம் இளையோரின் பங்களிப்பை, அடிப்படை அளவில் வலுப்படுத்தும் பணியை இளையோர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தத் தன்னார்வலர்கள் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை அரசுத் திட்டங்கள், சமூக முன்முயற்சிகள், நாட்டைக் கட்டமைக்கும் நடவடிக்கைகளுடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

மை பாரத் இளையோர் தன்னார்வலர்கள், இளைஞர் மன்றங்கள், உள்ளூர் சமூகங்கள், மாவட்ட மைபாரத் அலுவலகங்கள், பல்வேறு அரசுத்துறைகள் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகின்றனர். கிராமம் அல்லது சமூக அளவில் இளைஞர் மன்றங்களை ஊக்குவிப்பதற்கும் புனரமைப்பதற்கும் அவர்கள் பொறுப்புடையவர்கள். மேலும் மை பாரத்தின் முக்கியத் திட்டங்கள், சிறப்புத்திட்டங்கள், ஒருங்கிணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உதவுவதோடு மக்கள் தொடர்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். அவர்களுடைன பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மைபாரத் இளைஞர் தன்னார்வலருக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 595 பேர் மை பாரத் தன்னார்வலர்களாக உள்ளனர்.

இத்தகவலை மத்திய  இளையோர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர்  திரு மன்சுக் மாண்டவியா மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290358&reg=3&lang=1   

----

TV/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2290591) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati