வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2032-க்குள் உலகளாவிய பொம்மை சந்தையில் 5% பங்கினை அடைய இலக்கு: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தகவல்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 9:51PM by PIB Chennai
2032-க்குள் உலகளாவிய பொம்மை சந்தையில் 5 சதவீதப் பங்கு என்ற இலக்கை அடைவதற்கு வழிவகை காணவும், பொம்மைத் துறைக்கு ஆதரவளிக்கவும் ஒரு பணிக்குழு அமைக்கப்படும் என மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புது தில்லியில் உள்ள வணிஜ்ய பவனில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் இன்று (27.07.2026) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “பொம்மைகளுக்காக ஒன்றிணைவோம்: விரிவாக்கம், புத்தாக்கம், ஏற்றுமதியை முன்னெடுத்துச் செல்வோம்” என்ற தலைப்பிலான பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார்.
உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைத்தல், உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துதல், மதிப்புத் தொடர்களுக்கான தடைகளை அகற்றுதல் , திறமையான பணியாளர்களையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குதல், வடிவமைப்பு மற்றும் புத்தாக்கத்தைச் சாத்தியமாக்குதல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகிய ஆறு நோக்கங்களை அடைவதற்காக இந்தப் பணிக்குழு பணியாற்றும்.
பொம்மைத் துறை வழிகாட்டிப் புத்தகத்தையும் இந்த நிகழ்வில் திரு பியூஷ் கோயல் வெளியிட்டார். உற்பத்தியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான ஒரு விரிவான வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட இந்த நூல், உற்பத்திச் சூழல் அமைப்புகள், மதிப்புத் தொடர்கள், தரநிலைகள், இணக்கத் தேவைகள், திறன் மேம்பாடு, தயாரிப்புப் புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை, ஏற்றுமதி, வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகள் குறித்து செயல்படுத்தக்கூடிய வழிகாட்டுதலை வழங்குகிறது. உள்நாட்டு, சர்வதேச சந்தைகளில் போட்டித்திறனை வலுப்படுத்தவும், தங்கள் இருப்பை விரிவுபடுத்தவும் விரும்பும் பங்குதாரர்களுக்கு இது ஒரு நடைமுறை வளமாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290190®=3&lang=1
***
TV/SMB/KR
(रिलीज़ आईडी: 2290362)
आगंतुक पटल : 3