சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பரேலி நெடுஞ்சாலைகள் திட்ட நிறுவனம் தொடர்பான நடுவர்மன்ற நடவடிக்கைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாதகமான முடிவை பெற்றுள்ளது
प्रविष्टि तिथि:
27 JUL 2026 4:01PM by PIB Chennai
பரேலி நெடுஞ்சாலைகள் திட்ட நிறுவனம் தொடர்பான நடுவர்மன்ற நடவடிக்கைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாதகமான முடிவை பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 151 கிலோமீட்டர் தொலைவிலான பரேலி – சீதாபூர் சுங்கக்கட்டண முறை திட்டத்திற்காக, பரேலி நெடுஞ்சாலை திட்ட நிறுவனம் எரா உட்கட்டமைப்பு பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனமாகும். இந்த திட்ட ஒப்பந்தத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 2019 மே மாதம் ரத்து செய்திருந்தது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் நிலையை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டதன் மூலம், பொது வளங்களை பாதுகாப்பதுடன் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிர்வகிக்கும் ஒப்பந்தக் கட்டமைப்பின் வலிமையையும் உறுதிப்படுத்தியது.
இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் எழுந்த கோரிக்கைகள், எதிர் கோரிக்கைகளை 3 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர மன்றம் ஆய்வு செய்தது. ஒப்பந்ததாரர் நிறுவனம் ரூ.3,177 கோடி மதிப்பிலான 30 கோரிக்கைகளை எழுப்பியது. விரிவான பரிசீலனைக்குப் பிறகு பெரும்பாலான கோரிக்கைகளை நிராகரித்த நடுவர்மன்றம் ரூ.46 கோடி மட்டும் அதற்கான வட்டித் தொகையுடன் கூடிய 3 கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289902®=3&lang=1
***
TV/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2290075)
आगंतुक पटल : 10