திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாட்டு முயற்சிகள் - மூன்றாண்டுகளில், தமிழகத்தைச் சேர்ந்த 37,278 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்

प्रविष्टि तिथि: 27 JUL 2026 3:53PM by PIB Chennai

திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது. இதற்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிறுவனங்கள் திட்டம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழிற்பயிற்சி கல்வி நிலையங்கள் வாயிலாகச் செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். அதிகரித்து வரும் தொழில்நுட்பங்கள் உட்படத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெற்று, இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

2022-23 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0, புதிய, அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், எதிர்காலத் திறன்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், தரவுப் பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு, பசுமைத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில்  சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.

திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களின் வேலைவாய்ப்புத் திறனுக்கும், சந்தைத் தேவைக்கும் உள்ள  இடைவெளியைக் குறைக்க, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் பத்து அம்சத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2019-ம் ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட  பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் 4.0-ன் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 37,278 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

ஜூன் 30-ம் தேதி வரை, மக்கள் கல்வி நிறுவனங்கள் / தொழிற்பயிற்சி கல்வி நிலையங்கள் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21,668 பேரும், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ்1,681 பேரும் பயிற்சி பெற்றுள்ளனர்.  

மக்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு,  தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289887&reg=3&lang=1

(Release ID: 2289887)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290072) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी