சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினருக்கான பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.137.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
27 JUL 2026 2:57PM by PIB Chennai
பிரதமரின் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் என்பது சிறுபான்மையினர் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் சமூக உள்கட்டமைப்புகளை உருவாக்க, மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் சுகாதாரம், திறன் மேம்பாடு, கல்வி, மகளிர் சார்ந்த திட்டங்கள், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், விளையாட்டு, புதுப்பித்தக்க எரிசக்தி, இதர சமூக உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பட்ஜெட் மதிப்பீடுகள், திருத்தப்பட்ட மதிப்பீடுகள், செலவினம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 2026 - 26-ம் நிதியாண்டில் ரூ.1913.97 கோடி பட்ஜெட் மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.1565 கோடியாக திருத்தப்பட்டது. இதில் ரூ.1563.87 கோடி செலவிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2025 - 26-ம் ஆண்டில் ரூ.137.46 கோடி விடுவிக்கப்பட்டது. மேலும் 111 திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289850®=3&lang=1
***
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2289948)
आगंतुक पटल : 14