சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையின பிரிவினருக்கான தேசிய ஆணையத்தின் நிறுவன ரீதியிலான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
27 JUL 2026 2:59PM by PIB Chennai
கல்வித் துறையில் ஜைன சமூகத்தின் பங்களிப்பு என்ற ஆய்வை, தேசிய சிறுபான்மையினர் ஆணையம், 2026-ம் ஆண்டில் நடத்தியுள்ளது. இந்த ஆய்வு, இந்தியாவில் உள்ள ஜைன சமூகத்தின் வரலாற்றுப் பரிணாம நிலை, நிறுவன ரீதியிலான பங்களிப்பு, கல்வி தத்துவம் ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது. கற்றல், ஆராய்ச்சி, கல்வி உதவித்தொகை, மதிப்பு சார்ந்த கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் ஜைன சமூகத்தைச் சேர்ந்த அறக்கட்டளைகள், கொடையாளர்கள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகளின் பங்களிப்பை இந்த ஆய்வு பதிவு செய்கிறது.
தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தனது ஆலோசனை, எளிய கடமைகளை நிறைவேற்றும் விதமாக, 2026 மே 19 அன்று, புதுதில்லியில், மாநில சிறுபான்மையினர் ஆணையங்களின் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாநில சிறுபான்மையினர் ஆணையங்களின் பிரதிநிதிகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். சிறுபான்மை சமூகங்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கும், அவை சம்பந்தப்பட்ட பயனாளிகளை சென்றடையச் செய்யும் நடவடிக்கைகளை செம்மைப்படுத்துவதற்கும், நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிர்வாக ஒருங்கிணைப்பு, குறை தீர்க்கும் வழிமுறைகள், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிப்பதற்கான ஒரு தளமாக இந்த மாநாடு அமைந்தது.
மாநிலங்களவையில் இன்று, மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289851®=3&lang=1
***
TV/SV/KR
(रिलीज़ आईडी: 2289883)
आगंतुक पटल : 11