வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேசத்தில் எஃப்சிவி புகையிலையின் சந்தை நிலவரத்தை மத்திய வர்த்தகத் துறை ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 26 JUL 2026 6:57PM by PIB Chennai

மத்திய அரசின் வர்த்தகத் துறையைச் சேர்ந்த, கூடுதல் செயலாளர் திரு நிதின் குமார் யாதவ் தலைமையிலான ஒரு குழு, குறைந்த அளவு நிகோடின் கொண்ட ஃப்ளூ-க்யூர்டு வர்ஜீனியா எனப்படும் எஃப்சிவி (FCV) புகையிலையின் தற்போதைய சந்தை நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று (25 ஜூலை 2026) ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றது. புகையிலை வாரியத்தின் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் முன்னிலையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் குழுவினர் கலந்து கொண்டனர். எஃப்சிவி புகையிலை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பது, எஃப்சிவி புகையிலைத் துறையில் நிலைத்தன்மையை உறுதி செய்வது ஆகியவற்றுக்கான நீண்டகால நடவடிக்கைகளை ஆராய்வது போன்றவை தொடர்பாக இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் குழுவினர் வெள்ளம்பள்ளியில் உள்ள புகையிலை வாரிய ஏல தளத்தையும் பார்வையிட்டனர். அங்கு நடைபெற்று வரும் ஏல நடவடிக்கைகளைக் கவனித்து, ஏல செயல்முறையை ஆய்வு செய்தனர். சந்தை நிலவரங்கள் குறித்த நேரடிக் கருத்துக்களைப் பெறுவதற்காக, அதிகாரிகள் எஃப்சிவி புகையிலை விவசாயிகளுடன் அவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர். புகையிலை வாரியத்தால் ஏலங்கள் வெளிப்படையாகவும் ஒழுங்காகவும் நடத்தப்பட்டதை இந்தக் குழுவினர் பாராட்டினர்.

கூடுதல் செயலாளர் திரு நிதின் குமார் யாதவ், மாறிவரும் சந்தை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக விவசாயிகளுக்கு உறுதியளித்தார். ஆந்திரப் பிரதேச அரசு, புகையிலை வாரியம், பிற சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து, எஃப்சிவி புகையிலை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

***

(Release ID: 2289652)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2289680) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu