அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசப் பிரிவினை வரலாற்றின் மாபெரும் தவறு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் இப்போதைய முக்கிய அம்சம் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
26 JUL 2026 5:27PM by PIB Chennai
தேசப் பிரிவினை வரலாற்றின் மிகப்பெரிய தவறு என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரை மீட்பது மட்டுமே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இப்போது நிலுவையில் உள்ள பிரச்சினையாக உள்ளது என்றும் மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லியில் உள்ள காஷ்மீரி கலாச்சார மையத்தில், ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றம், மிர்ப்பூர் பலிதான் பவன் சமிதியின் ஒரு பிரிவான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இளைஞர் மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த 27-வது கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் பாதுகாப்புச் சூழலில் ஒரு உறுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், வெளிநாட்டு அத்துமீறல்களுக்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை, உறுதியான தீர்க்கமான ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கார்கில் வெற்றியானது இந்திய ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியத்தையும், இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தேசத்தின் தளராத அர்ப்பணிப்பையும் அடையாளப்படுத்துகிறது என்றார். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வும் தேசிய ஒற்றுமையும் தேவைப்படுவதால், கார்கில் போரின் படிப்பினைகள் இன்றும் பொருத்தமானவையாகவே இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
கார்கில் மோதலின் வரலாற்றுப் பின்னணியை விவரித்த அமைச்சர், 1999-ம் ஆண்டு நிகழ்வுகளைத் தனித்துப் பார்க்க முடியாது என்றும், அவை பிரிவினையில் தொடங்கி நீண்டுகொண்டே வந்த நிகழ்வுகளின் ஒரு பகுதி என்றும் கூறினார். பிரிவினையை "வரலாற்றின் மாபெரும் தவறு" என்று குறிப்பிட்ட அவர், அந்த முடிவு அளவற்ற மனிதத் துயரத்தை ஏற்படுத்தியது எனவும் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தது என்றும் கூறினார். சுதந்திர இந்தியாவில் காணப்பட்ட மிகக் கொடிய மனிதாபிமானப் பேரழிவுகளில் ஒன்றாக காஷ்மீரி பண்டிதர்களின் இடம்பெயர்வையும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா தனது தேசியப் பாதுகாப்பு அணுகுமுறையை அடிப்படையாக மாற்றியமைத்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற கொள்கையை அரசு கடைப்பிடித்து, எல்லை மேலாண்மையை வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த மாற்றம், தேசிய நம்பிக்கையை கணிசமாக மேம்படுத்தி, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி பன்சூரி ஸ்வராஜ் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கார்கில் போர் வீரரான கர்னல் கே.கே. சர்மா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். 1999 கார்கில் போரின்போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு மஹிந்தர் மேத்தா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இளைஞர் மன்றம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289625®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2289658)
आगंतुक पटल : 8