சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தில்லி நகரின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப, பூமிக்கடியில் போக்குவரத்து கட்டமைப்பை மாற்றியமைக்கும் சுரங்கப்பாதைத் திட்டம்
प्रविष्टि तिथि:
25 JUL 2026 5:37PM by PIB Chennai
ஆண்டுதோறும் இந்தியாவின் தலைநகருக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களுக்கு, தில்லி குறித்த முதல் பிம்பம் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த விமான நிலையப் பாதைகள், போக்குவரத்துத் தேக்கம், முக்கிய வணிக, தூதரக, கலாச்சாரப் பகுதிகளுக்கு இடையேயான நீண்ட பயணமாக அமைகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தே.நெ.-148 ஏஇ-ல் உள்ள 6 வழித்தடங்களைக் கொண்ட துவாரகா சாலை சுரங்கப்பாதை, தேசிய தலைநகர் பகுதிகளில், நகர்ப்புறப் போக்குவரத்தை மறுவரையறை செய்யவுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், 8.1 கி.மீ நீளமும், ஆறு வழித்தடங்களும் கொண்டதாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஹைப்ரிட் அன்யூவிட்டி மோட் முறையில் ரூ 6,969.67 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படவுள்ள இத்திட்டம், துவாரகா விரைவுச்சாலையில் (தேநெ-248 பிபி) உள்ள ஷிவ் மூர்த்தி இன்டர்சேஞ்ச்பகுதியையும், வசந்த் குஞ்சில் உள்ள நெல்சன் மண்டேலா மார்க் பகுதியையும் இணைக்கும்.
இந்த வழித்தடம் மேற்கு, தெற்கு தில்லிக்கு இடையே அதிவேக, கட்டுப்பாடான அணுகுமுறை கொண்ட இணைப்பை வழங்குகிறது. இது குறிப்பாக, குருகிராம், துவாரகா, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், மேற்கு தில்லியிலிருந்து வரும் போக்குவரத்திற்குப் பெரிதும் பயனளிக்கும். இதன் மிக முக்கிய அம்சம் 3.14 கி.மீ நீளமுள்ள இரட்டை வழி சுரங்கப்பாதையாகும். இதில் 1.98 கி.மீ தூரம் தெற்கு ரிட்ஜ் பகுதியில் பூமிக்கு அடியில் அமைகிறது. இது தில்லியின் மிக முக்கியமான சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பைப் பாதுகாப்பதுடன், தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289390®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2289411)
आगंतुक पटल : 15