வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கட்டாய உழைப்பு மீதான அமெரிக்காவின் 301-வது பிரிவின் இறுதி நடவடிக்கைகள் இந்தியாவுக்கு 10% என்ற குறைந்தபட்ச வரி விகிதம் நீடிக்கிறது

प्रविष्टि तिथि: 25 JUL 2026 3:36PM by PIB Chennai

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவ அமைப்பான யுஎஸ்டிஆர் (USTR), 1974-ம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-ம் பிரிவின் கீழ் எடுக்கப்படும் இறுதி நடவடிக்கைகளை 2026-ம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி அறிவித்தது. கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான தடைகளை விதித்து, அதை அமல்படுத்துவது தொடர்பாக, இந்தியா உட்பட 60 நாடுகளின் செயல்கள், கொள்கைகள், நடைமுறைகள் குறித்து யுஎஸ்டிஆர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

யுஎஸ்டிஆர், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% மதிப்புசார் வரியை விதித்துள்ளது. இது, 2026 ஜூன் 2-ம் தேதி முதலில் முன்மொழியப்பட்ட 12.5% வரியிலிருந்து குறைக்கப்பட்டதாகும். இந்த விசாரணை முழுவதும், இந்திய அரசு, விரிவான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள், பொது ஆலோசனைகளில் பங்கேற்பது உள்ளிட்ட நேரடி கலந்தாய்வுகள் மூலம் யுஎஸ்டிஆர்- உடன் நெருக்கமாக ஈடுபட்டிருந்தது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, இறுதி நடவடிக்கைகளின் கீழ் இந்தியா கூடுதல் வரிகளில் மிகவும் குறைவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது முக்கியத் துறைகளில் இந்திய ஏற்றுமதிகளுக்கு நன்மையை வழங்குகிறது.

தற்போது கூடுதல் வரிகள் ஏதுமில்லாத, பொதுவான மருந்துகள், ஸ்மார்ட்போன்கள், குறிப்பிட்ட சில பொருட்கள் போன்ற, அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிகளில் கணிசமான பங்கு, கூடுதல் 10% வரியின் வரம்பிற்கு வெளியே தொடர்ந்து நீடிக்கிறது. மேலும், எஃகு, அலுமினியம், வாகன உதிரிபாகங்கள் உட்பட, ஏற்கனவே பிரிவு 232-ன் கீழ் உள்ள பொருட்களுக்கு கூடுதல் 10% வரி விதிக்கப்படவில்லை. பிரிவு 232-ல் வரிகள், வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன், அனைத்து நாடுகளுக்கும் பரவலாகப் பொருந்தும். இந்த விதிவிலக்குகளின் காரணமாக, அமெரிக்காவிற்கான இந்தியாவின் 45% ஏற்றுமதிகளானவை  கூடுதல் 10% வரி வரம்பிற்கு வெளியே உள்ளது. மீதமுள்ள 55% ஏற்றுமதிகளுக்கு கூடுதல் 10% வரி விதிக்கப்படும். இதில் இந்தியாவின் வரிச்சுமையானது, இந்த ஆய்வில் உள்ள பெரும்பாலான பிற பொருளாதாரங்களை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

இறுதி நடவடிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஜவுளித் துறை சார்ந்த செயல்முறை இன்னும் நிறுவப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறது.

2026 பிப்ரவரி 2-ம் தேதி அறிவிக்கப்பட்டு, 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கைக்கு இணங்க, இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289348&reg=3&lang=1

****

(Release ID: 2289348)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2289382) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati