ஆயுஷ்
ஸ்ரீ சந்த் கஜானன் மகாராஜ் அவதரித்த 150-வது தினத்தை முன்னிட்டு, நினைவு நாணயம், அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் - மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் வேண்டுகோள்
प्रविष्टि तिथि:
25 JUL 2026 11:54AM by PIB Chennai
மத்திய ஆயுஷ், சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ், போற்றுதலுக்குரிய போற்றத்தக்க துறவியான ஸ்ரீ சந்த் கஜானன் மகாராஜ் அவதரித்த 150-வது தினத்தை சிறப்பிக்கும் வகையில், ரூ.150 மதிப்பிலான நினைவு நாணயம், நினைவு அஞ்சல் தலையை வெளியிட மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய தொலைத்தொடர்பு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா, மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதங்களில், இந்த கோரிக்கையை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறு திரு. ஜாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள ஷேகானில், பிப்ரவரி 1878-ல், தோன்றிய ஸ்ரீ சந்த் கஜானன் மகாராஜ், மகாராஷ்டிரா, இந்தியாவின் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தில் மிகவும் போற்றுதலுக்குரிய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பதைத் தனது கடிதங்களில் இருந்து திரு ஜாதவ் சுட்டிக்காட்டினார்.
ஆன்மீகம், பக்தி, கருணை, தன்னலமற்ற சேவை, மனிதநலன் ஆகிய பண்புகள் மூலம், ஸ்ரீ சந்த் கஜானன் மகாராஜின் வாழ்க்கையும், போதனைகளும், தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக திரு. ஜாதவ் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289277®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2289344)
आगंतुक पटल : 4