பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
போஷன் 2.0 திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
24 JUL 2026 1:59PM by PIB Chennai
ஊட்டச்சத்து குறைபாடு, அங்கன்வாடி சேவைகள், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் வளரிளம் பருவப் பெண்களுக்கான திட்டம் (14-18 வயதுடைய பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில்) ஆகியவை மிஷன் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 என்ற குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும், இதில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. . 2025-26 ஆம் நிதியாண்டில் போஷன் 2.0 இயக்கத்தின் கீழ் ரூ. 21,960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அங்கன்வாடி மையங்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் பயனாளிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மிஷன் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 இன் கீழ் வரையறுக்கப்பட்ட குறியீடுகளில் கண்காணிக்கவும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கருவியான 'போஷன் டிராக்கர்' டிஜிட்டல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றுதல், எடை குறைவாக இருப்பது ஆகியவற்றைக் கண்டறிய போஷன் டிராக்கரின் கீழ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி. சாவித்ரி தாக்கூர் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288796®=48&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2289237)
आगंतुक पटल : 6