ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்த தெற்கு ரயில்வேயில் 140 ரயில் நிலையங்கள், 1,481 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 24 JUL 2026 4:17PM by PIB Chennai

இந்திய ரயில்வேயில் பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புக் கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கில், ரயில் நிலையங்கள் மற்றும் பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இயக்கத்தில் உள்ள அனைத்து வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 3,215 ரயில் நிலையங்கள் மற்றும் 13,409 பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 140 ரயில் நிலையங்கள் மற்றும் 1,481 பயணிகள் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பயணிகள் பெட்டிகளில் அதிக எண்ணிக்கையில் சிசிடிவி பொருத்தப்பட்ட மண்டலங்களில் தெற்கு ரயில்வே நாட்டில் 3-வது இடத்தை வகிக்கிறது.

நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ பகுப்பாய்வு அம்சங்கள் கொண்ட இந்த சிசிடிவி அமைப்புகள் மூலம், கடந்த 2023 முதல் ஜூன் 2026 வரை பாதுகாப்பு தொடர்பான 9,840 குற்ற நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288875&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2289151) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada