பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 24 JUL 2026 2:02PM by PIB Chennai

15 வது நிதி ஆணையத்தில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பருவத்துப் பெண்கள் (14 – 18 வயது) ஆகியோருக்கான ஊட்டச்சத்து ஆதரவின் கூறுகள்; இளம் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வி [3-6 வயது], நவீன, மேம்படுத்தப்பட்ட சக்ஷம் அங்கன்வாடி, ஊட்டச்சத்து இயக்கம், வளரிளம் பருவத்துப் பெண்களுக்கான திட்டம் ஆகியவை அடங்கிய அங்கன்வாடி உள்கட்டமைப்பு ஆகியவை மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 இன் கீழ் மறுசீரமைக்கப்பட்டன.

மிஷன் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0-ன் கீழ், ஆறு சேவைகளின் தொகுப்பு, அதாவது, துணை ஊட்டச்சத்து, நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆறு சேவைகளில் மூன்று, அதாவது, நோய்த்தடுப்பு, உடல்நல பரிசோதனை மற்றும் பரிந்துரைச் சேவைகள் ஆகியவை ஆரோக்கியம் தொடர்பானவை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு மூலம் அவை வழங்கப்படுகின்றன. இந்தச் சேவைகள் தகுதியான பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு, அதாவது நாடு முழுவதும் உள்ள 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தத் தகவலை மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. சாவித்ரி தாக்கூர் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288798&reg=48&lang=1

 

***

TV/PKV/KR

 


(रिलीज़ आईडी: 2288929) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada