பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்

प्रविष्टि तिथि: 25 APR 2026 10:50PM by PIB Chennai

ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தனர். கல்விச் சிறப்பிலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் அதன் புகழ்பெற்ற பயணத்தில், இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் நூற்றாண்டு விழா ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். உயர்கல்விக்கு இக்கல்லூரி ஆற்றிவரும் நீண்டகாலப் பங்களிப்பையும், பல்வேறு துறைகளில் தலைமுறை தலைமுறையாகத் தலைவர்களை உருவாக்குவதில் அதன் பங்கையும் அவர் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியின் போது, ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகளை சந்தித்தேன். இந்த ஆண்டு, இந்நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இது தொடர்பாக ஒரு நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. இந்நிறுவனத்திற்கு எனது நல்வாழ்த்துகள்."

***

(Release ID: 2255596)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2288752) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam