பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரளம் மாநிலத்தின் திருச்சூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 21 APR 2026 8:24PM by PIB Chennai

கேரளம் மாநிலத்தின் திருச்சூரில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா  ரூ. 50,000-மும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:

“கேரளம் மாநிலத்தின் திருச்சூரில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு பற்றி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.”

“இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்.”

 

(Release ID: 2254301)

***

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2288748) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam