இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைக்கிள் ஓட்டுவது நமது ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும், பூமியையும் பாதுகாக்க உதவும் – மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:24PM by PIB Chennai

ஸ்காட்லாந்தின் கிலாஸ்கோ நகரில் இந்திய வம்சாவளியினருடன் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். இந்தியாவை உற்சாகமூட்டுங்கள் என்ற முன்முயற்சியின் கீழ் உடல்தகுதி, ஆரோக்கியமான வாழ்வு, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றின் செய்தியைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது. 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியக் குழுவினரை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய அமைச்சருடன்  இந்திய வம்சாவளியினர் ஆர்வமுடன் பங்கேற்று அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு தங்களது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினர்.

விளையாட்டுகள், உடல்தகுதி ஆகியவற்றின் மூலம் இந்திய வம்சாவளியினருடன் மக்களுக்குத் தொடர்பு ஏற்படுத்துவதை வலுப்படுத்துவதையும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சிகளையும் இந்த முன்முயற்சி பிரதிபலித்தது.

இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு பிரதமரின் ஃபிட் இந்தியா இயக்கத்தில் இணையுமாறு இந்தியர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார். சைக்கிள் ஓட்டுவது நமது ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும், பூமியையும் பாதுகாக்க உதவும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288278&reg=3&lang=1

***

(Release ID: 2288278)

SS/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2288686) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Malayalam